பாண்டிருப்பு அகரம் சமூகஅமைப்பின் ஏற்பாட்டில் பாவாணர் அக்கரைப்பாக்கியனினால் தயாரிக்கப்பட்ட “விமோசனம்’ குறுந்திரைப்பட வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை அதன் தலைவர் செ.துஸ்யந்தன் தலைமையில பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், கல்முனை மாணவர் மீட்புப் பேரவையின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்முதல் பிரதியினை தேசமானிய எஸ்.சிறிரங்கன் பெற்றுக்கொண்டார்.








