இருதயபுரம் இருதயநாதர் ஆலய வருடாந்த உற்சவம்

 (லியோன் ராஜ்  )    

மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய வருடாந்த  திருவிழா கடந்த 05.07.2013  வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணிக்கு கொடியோற்றத்துடன் நவநாட்கள் ஆரம்பமாகியது.

நவநாள் காலங்களில் திருப்பலி முடிந்ததும் , தெருவெளி நாடகங்கள் ,  “ சந்தேகப் பூகம்பம்”   “குடிகாரச் சாக்கடை”  “அக்கரைப் பச்சை”   “வீட்டில சண்டை”    “லீசிங்…குடும்பம் லூசிங்”; ,  “இலஞ்சப் பூதம்”   ஆகிய நாடகங்கள் ஆலய முன்றலில் காண்பிக்கப்பட்டது.

அண்மையில்   “புது நன்மை . உறுதிப்பூசுதல்” தேவதிரவிய அருள் அடையாள கொண்டாட்டத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மாலை 05.00 மணிக்கு  இருதயநாதரின் திரு உருவம் வழமையான வீதிகளினூடக பவனி வந்து ஆலயத்தை வந்தடைந்ததும் நற்கருனை வழிபாடும் ஆசீரும் இடம்பெற்றது.

நேற்று ஞாயிற்று கிழமை காலை  07 .00 மணிக்கு திருநாள் சிறப்புத்;திருப்பலி அருட்தந்தை   ஆ.N.சந்திரகாந்தன்   அவர்களின் தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது.

திருவிழாத் திருப்பலி முடிவுற்றதும் அன்னதானமும் வழங்கப்பட்டது.                     “ஈஸ்டன் ஸ்டார்”  விளையாட்டுக் கழகம் 37வது வருடமாக நடத்தும் .விளையாட்டு போட்டியும் .  கலை நிகழ்வும் . பங்குத்தற்தை அருட்பணி. ஆ.ஸ்ரனிஸ்லாஸ் அவர்கள் காலை திருநாள் திருப்பலி முடிவுற்றதும் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.  

சிறப்பு  வினோத விளையாட்டுக்கள். மாலை  ஆலய முன்றலில் இடம்பெற்றன.