காட்டு யானை தாக்கி முதியவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சடித்தீவு வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மேற்படி வாவியோரமாக வந்த காட்டு யானை இந்த முதியவரைத் தாக்கியதாக உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

கக்கிளாச்சோலை, பேரில்லாவெளியைச் சேர்ந்த 68 வயதான கந்தப்பன் வீரசிங்கம் என்பவரே காட்டு யானையில் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

சடலம் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.