வவுணதீவில் தொழிற்பயிற்சி பெற்ற ஒரு தொகுதி இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் ஜே.சி.பி.யிற்சி பெற்ற 25 இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு நைரா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் சிறுவர் நிதிய மட்டக்களப்பு பணிமனை இணைந்து மேற்கொண்ட இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ இவ் 25 இளைஞர்களுக்கும் ஜேசி.பி.பயிற்சி வழங்கப்பட்டது.
இளைஞர் சேவை அலுவலகர் மா.சசிகுமாரின் ஏற்பாட்டில் நேற்று மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் வெ.தவராஜாவினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
25 இளைஞர்கள் பயிற்சி பெற்ற நிலையில் இவர்களில் 10 பேர் தற்போது வெளிநாட்டில் குறித்த பயிற்சியுடன் தொடர்புடைய தொழிலினைப் பெற்றுள்ளதுடன் உள்ளுரில் 8 பேரும் தனியார் கம்பனிகளிலும் தொழில் அதிபர்களிடமும் தொழிலினைப் பெற்றுள்ளதாகவும் இளைஞர் சேவை அலுவலகர் தெரிவித்தார்.
வெளிநாடு சென்றவர்களின் சான்றிதழ் அவர்களது பெற்றாரிடம் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.