மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
நாயொன்று வீதியின் குறுக்காக கடந்து சென்ற வேளையிலேயே புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கல்குடாவிலிருந்து வாழைச்சேனை நோக்கி மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள், வீதியின் குறுக்காக கடந்து சென்ற நாயை காப்பாற்றுவதற்காக மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்த வேளையில் பின்னால் வந்துகொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே இவ்விபத்து சம்பவித்ததாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த மூவரும் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.