ஞாயிறு மற்றும் இரவு வேளைகளில் தனியார் வகுப்புகளை தவிர்க்குமாறு உத்தரவு

Husna

வாழைச்சேனை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு வேளைகளிலும் தனியார் வகுப்புகள்தவிர்க்கப்பட வேண்டும் எனவும் வகுப்பு இடம்பெறும் பகுதிகளில் சுற்றாடல் மற்றும் ஏனைய வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும் என பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் உத்தரவிட்டுள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் வகுப்புகள் இடம் பெறும் பகுதிகளுக்கு சென்ற வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையிலான குழுவினரால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் விடுமுறை தினங்களிலும் இரவு நேரங்களிலும் பிரத்தியோக வகுப்புகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பிரத்தியேக வகுப்பு இடம் பெறும் இடத்தில் குடி நீர் மற்றும் சுகாதார வசதிகள் சுற்றுச் சூழல் விடயங்கள் தொடர்பாகவும் பிரத்தியோக வகுப்பு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இக் குழுவில் பிரதேச செயலாளருடன் நன்னடத்தை உத்தியோகத்தர் ஆர்.விக்னேஸ்வரன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.அழகுராஜ், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.