மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் 1008 சங்காபிஸேகம் நாளை

மட்டக்களப்பு வரலாற்று புகழ் மிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளை காலை கும்பாபிஸேக பூர்த்தி சங்காபிஸேகம் இடம்பெறவுள்ளது.

நாளை காலை 9.00மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி 1008 சங்குகளைக்கொண்ட சங்காபிஸேகம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் நாளைய தினம் கும்பாபிஸேக சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டுவைக்கப்படவுள்ளதாக ஆலய தலைவர் அகிலேஸ்வரன் தெரிவித்தார்.

எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.