மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளிலும் டைனமோ பொருத்திய லைட்களை பொருத்தாத துவிச்சக்கர வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வண்டிகளில் பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகள் பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரம் மற்றம் களுவாஞ்சிகுடி உட்பட சில பகுதிகளிலேயே இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இரவு வேளைகளில் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகள் கூட பறிக்கப்பட்டதன் காரணமாக இரவு வேளைகளில் மாணவிகள் உட்பட தூர இடத்துக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகினர்.
பொலிஸார் எதுவித முன்னறிவித்தலும் இன்றி இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் பிரதேசங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.