போசாக்கு மாதத்தை முன்னிட்டு வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் போசாக்கு விழிப்புணர்வு பேரணியும் கர்பிணித் தாய்மார்களின் போசாக்குத் தொடர்பான கண்காட்சியும் நேற்று (24.07.2013) இடம் பெற்றது.
வாகரை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.பி.திஸாநாயக்க தலைமையில் இடம் பெற்ற விழிப்புணர்வுப் பேரணி கன்டலடி அருந்ததி வித்தியாலயத்திற்கு முன்னாள் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு திருமலை வீதியூடாக வந்தடைந்த பேரணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை வந்தடைந்து அதன்; பின்னர் அங்கு பாடசாலை மாணவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குமான போசாக்கு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியும் இடம் பெற்றது.
வேல்ட் விஷன் அனுசரனையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






