களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஶ்ரீ முருகன் ஆலய திருவேட்டை நிகழ்வு வீடியோ

களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஶ்ரீ முருகன் ஆலய வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் இன்று 9ம் நாள் திருவிழா இடம்பெறுகின்றது. 

இன்று முருகப்பெருமான் திருவேட்டை நிகழ்வுக்காக தனது அண்ணனான சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று உள் வீதிவளியாக வருகை தந்து ஆலயத்திற்கு அருகில் திருவேட்டை நிகழ்வு இடம்பெற்றது.

இத்திருவேட்டையின் தத்துவம் மனித மனங்களில் இருக்கின்ற மிருக குணங்களை அழிப்பது என்பதாகும்.

இத்திருவேட்டை நிகழ்வினை களுதாவளை இந்து இளைஞர் மன்றத்தினர் வருடாவருடம் நடாத்துவது குறிப்பிடத்தக்கது