களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஶ்ரீ முருகன் ஆலய வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் இன்று 9ம் நாள் திருவிழா இடம்பெறுகின்றது.
இன்று முருகப்பெருமான் திருவேட்டை நிகழ்வுக்காக தனது அண்ணனான சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று உள் வீதிவளியாக வருகை தந்து ஆலயத்திற்கு அருகில் திருவேட்டை நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து வருடாவருடம் நடாத்தப்படும் திருவேட்டை நாடகம் இடம்பெற்றது இத்திருவேட்டை நாடகத்தினை களுதாவளை மகா வித்தியாலய மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர்.









