மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த திருவிழாவில் சந்தையடி விநாயகர் ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள்,மயிலாட்டம்,கரகாட்டத்துடன் பட்டு எடுத்துவரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆலயத்தில் ஆறு மேளக்கச்சேரிகளுடன் திருவிழா கோலாகலமாக இடம்பெற்றதுடன் சுவாமி முத்துச்சப்புரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.