சமுர்த்தி ஆணையாளர் நாயகம் திணைக்களம், சமுர்தி அதிகாரசபை ஆகியவற்றின் அனுசரணையுடன் நாவிதன்வெளிப் பிரதேசசெயலகம் நடாத்திய சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும், திரிய பியச வீடு கையளிக்கும் நிகழ்வும் நாவிதன்வெளி பிரதேசசெயலகக் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை பிரதேச செயலாளர் சு.கரன் தலைiயில் நடைபெற்றது.
இதில் உணவு மற்றும் போசாக்கு அமைச்சர் பி.தயாரெத்தின மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டதுடன் இதில் சிப்தொர புலமைப்பரிசில் வழங்கி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அதேவேளை அமைச்சர் பி.தயாரெத்தின, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன ஆகியோரின் சேவையினைப் பாராட்டி கெரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)


