சுகாதார அமைச்சும் கல்வியமைச்சும் இணைந்து பாடசாலை மாணவர்கள் மத்தியில் சத்துணவின் அவசியத்தை ஏற்படுத்தும் வகையில் ஜுலை மாதத்தினை சத்துணவு மாதமாக பிரகடனப்படுத்தி நிகழ்வுகளை மேற்கொண்டுவருகின்றது.
இதன் கீழ் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களம் ஏற்பாடுசெய்த நிகழ்வு மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது சத்துணவு தொடர்பில் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் திருமதி ரஞ்சன் தலைமையில் ஆரம்பமான இந்த பேரணியில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,தாதிய உத்தியோத்தர்கள்,குடும்பநல உத்தியோகத்தர்கள்,அதிபர் ஆசிரியர்,மாணவர்கள் என பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் சத்துணர்வு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் சத்துணர்வு தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவைக்கொண்ட இலைக்கஞ்சிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் சத்துணவின் தேவை ,அதன் நன்மைகள் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.