அந்த வகையில், மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஆன்மீக இயக்குனரும், இயேசுசபை மேலாளருமான அருட்தந்தை போல் சற்குணநாயகம், மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகஸ்தரும், மட்டக்களப்பு மேற்றிராசன கிறிஸ்தவ வாழ்வு சமூகத் தலைவருமான ஜீ.ஜே.பு.து.சாந்தக்குமார்,மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை ஆசிரியரும் மட்டக்களப்பு மேற்றிராசன கிறிஸ்தவ வாழ்வு சமூக செயலாளருமான திருமதி. வசந்திநேரு ஆகியோர் லெபனானின் பெயிரூட்டில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பயணமாகினர்.
இவர்கள், இன்று காலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகையிடம் ஆசீர் பெற்றனர்.
இவர்களுக்கு ஏனைய கிறிஸ்தவ வாழ்வு சமூக உறுப்பினர்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
இவ் உலக மாகாநாட்டில் 64 நாடுகள் பங்கேற்பதோடு இம்மகாநாடு 30.07.2013 ஆரம்பமாகி 08.08.2013 வரை நிறைவுபெறவுள்ளது என கிறிஸ்தவ வாழ்வு சமூகம் அங்கத்தவரும், கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் ஊடகப்பிரிவு உத்தியோகஸ்தருமான எஸ்.மைக்கல் தெரிவித்தார்.