தமிழ் மக்களுக்கான அரசியல்அபிலாசையினைப் பெற்றெடுக்கும் வரை தமிழ்க் கூட்டமைப்பின் சேவை ஓயாது தொடர்ந்து கொண்டே இருக்கும் அதற்காக தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மாவடிமுன்மாரி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் மேலும் பேசுகையில்,
எமது சமூகம் ஒழுக்கத்தினை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும் எவ்வாறு கற்றும் ஒழுக்கம் இல்லாத மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று உயர் பட்டம் பெற்றாலு ஒழுக்கம் இல்லாவிட்டால் சமூகம் ஏற்காது.
இன்று வடக்கு கிழக்கில் கூடுதலாக ஒழுக்கமற்ற செயற்பாடுகளே நடைபெற்றுக்கொண்டு வருவதனை அவதானிக்க முடிகிறது மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் வறுமை அதிகம் உள்ள மாவட்டமாக இருந்தாலும் வறுமையினை இல்லாமல் செய்வதற்கு ஒழுக்கம் அத்தியாவசியமாக உள்ளது.
ஆனால் வடகிழக்குப்பகுதியில் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தினை சீர் குலைக்கவும் கலாசார சீர்கேடுகளை ஏற்படுத்தவும் பலர் ஊடுருவியுள்ளனர் இதனால்நாம் அவதானமா இருக்க வேண்டும்.
இன்று வடகிழக்குப் பகுதிகளில் கலாசாரத்தினை மாற்றுவதற்காக புத்தர் சிலைகளைநிறுவும்நடவடிக்கையும்,இரணுவமயமாக்கல் நடவடிக்கையும், நிலஆக்கிரமிப்பும் என்றும் இல்லாத வாறு இடம்பெறுகிறது.
இதனைத் தடுக்க அரச கட்சியுடன் இருப்பவர்களுக்கோ அல்லது அரசுடன் ஒட்டியுள்ளவர்களுக்கோ முடியாது என்பது தமிழ்மக்களுக்கு நன்கு தெரியும் ஆகையால்தான் தமிழ்கூட்டமைப்பினை மக்கள் ஏற்றுள்ளனர் என்றார்
