ஏறாவூர் வடபத்திரகாளியம்மன் ஆலய பாற்குட பவனி

(பே.சபேஸ்)

கிழக்கு மாகாணத்தில் பிரசித்திபெற்ற ஏறாவூர் நான்காம் குறிச்சி வடபத்திர காளியம்மன் ஆலய வருடாந்த உற்சபத்தில் பால்குட பவனி நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
 பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவணி பிரதான வீதியூடாக சென்று காளி கோவிலை அடைந்தது. பக்தர்கள் பாலாபிசேகம் செய்தனர். இதையடுத்து வை.ஈ.சந்திரகாந்தன் குருக்கள் தலைமையில் விஷேட ப+ஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

இதன் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் இரா சாணக்கியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.