சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று(சனிக்கிழமை) இரத்ததானம் நடைபெற்றது.
இந்த இரத்ததான ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.கே.கித்சிறி பண்டார, சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர் ஆர்.சிறினிவாசன், மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்தவங்கி வைத்தியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளும் சிறைச்சாலையை சுற்றியுள்ள பொதுமக்களும் இந்த இரத்ததானத்தில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
கடமை நேரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் ஆத்மா சாந்திக்காக இந்த இரத்ததானம் நடைபெற்றதாக மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புhரி உத்தியோகத்தர் ஆர்.சிறினிவாசன் தெரிவித்தார்.