படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதினால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவேளை கடல் அலை மற்றும் காற்றின் வேகம் போன்றவற்றின் தாக்கத்தினால் படகு கவிழ்ந்துள்ளது.
இதன்போது அவ் வழியால் சென்று கொண்டிருந்த மற்றுமொரு படகு, பாதிப்புற்ற மீனவர்களின் கூச்சலைக் கேட்டு அவர்களை காப்பாற்றியதுடன் தன் வசம் வைத்திருந்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை வாழைச்சேனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த மனோஜ் பியங்கர (வயது 24), சமன் குமார (வயது 21), சுப்புள் மதுசிங்க (18) மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த றொசான் சாமர (வயது 25) ஆகியோர்களே இவ்வாறு காப்பற்றப்பட்டுள்ளனர். ஆனால் படகினை மீட்க முடியாமல் போய்விட்டதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
காப்பற்றப்பட்டவர்கள் வாழைச்சேனை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டதுடன் மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகளையும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
