மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டலில், இலங்கை வர்த்தக் கைத்தோழில் சம்மேளனங்களின் ஒன்றியத்தின் அனுசரணையில் இந்த இழைய வளர்ப்பு வாழைகள் மட்டக்களப்பில் நடுகை பண்ணப்படுகின்றன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அம்பாந்தோட்டை வெலியத்தை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து இந்த வாழை வளர்ப்பு நடைபெறவுள்ளது.
இன்று காலை நீர்ப்பாசனத்திணக்களத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் எம் மோகன்ராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், நிர்ப்பசன நீர் முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்தா விஜயரத்ன, உதவிப் பணிப்பாளர் - நிருவாகம் மாலா நந்தினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஆலோசனையில் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் ஊடாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் அம்பாந்தோட்டை வெலியத்தை ஆராய்ச்சி நிலையத்துக்கு விஜயம் செய்த மட்டக்களப்பு விவசாயிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த இளைய வளர்ப்பு வாழைகள் வளர்ப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாதிரியாக மட்டக்களப்பு நீர்ப்பாசனத்திணைக்களம், ஒன்பது விவசாயிகள், மாவட்ட செயலகம் என்பவற்றுக்கு 1200 கன்றுகள் பகிரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.மோகன் ராஜா தெரிவித்தார்.
இதந்த இளைய முறையிலான வளர்ப்பில், கூடிய விளைச்சல், சிறந்த தரம், ஒரே நேரத்தில் அறுவடை, ஒரு வாழைக்குலை 30-40 கிலோ கிராம் வரை எனப் பல நன்மைகள் காணப்படுகின்றன.
அதே நேரம், விவசாயிகளின் ஆர்வத்தினையும், வேண்டுகோளையும் பொறுத்து மேலும் இளைய வளர்ப்புக் கன்றுகளைப் பெற்றுத்தருவதற்கான நடடிவக்கைள் எடுக்கப்படும்.
அத்துடன், கொழும்புப்பல்கலைக்கழகத்தினரின் கண்காணிப்புடனே இந்த வாளைகளின் பராமரிப்புகள் முழுவதும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.