பங்குடாவெளி பிரதேசத்தில் இரு இந்தியப் பிரஜைகளும் கல்குடா பொலிஸ் பிரிவில் ஒரு இந்தியப் பிரஜையுமே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து குறித்த பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காகவே கைதாகியுள்ளனர்.
நேற்று (24) கைதான இவர்களில், பங்குடாவெளி பிரதேசத்தில் வைத்து கைதானவர்கள் 35 மற்றும் 37 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் இன்று (25) ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை கல்குடா பகுதியில் கைதான 35 வயதான மற்றைய இந்தியப் பிரஜை இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
