வாழைச்சேனை பிரதேச செயலக ஆதிவலம்புரி விநாயகர் ஆலய கும்பாபிஷேக இறுதி நாள் நிகழ்வு

Husna

வாழைச்சேனை பிரதேச செயலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆதிவலம்புரி விநாயகர் ஆலய பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக இறுதி நாள் நிகழ்வும் சங்காபிஷேகமும் அன்னதான நிகழ்வும் நேற்று (24.07.2013) இடம் பெற்றது.


கடந்த 13.07.2013ம் திகதி அதிகாலை யாக பூஜை, மகா பூர்ணாஹிதி பூஜை, பலி பூஜை, தீபாராதனை, வேதஸ்தோத்திரம், ஆசிர்வாதம். திருமுறை பாராயணம், ராகதாள பல்லவி,திருத்த உபசாரம், ஸ்தூல லிங்க அபிஷேகமும் தொடர்ந்து மூர்த்தி மஹா கும்பாபிஷேகமும், மஹா அபிஷேகமும் அருளாசியுரை தசமங்கள தரிசனம், பிரதிஸ்டா பிரசாதம் வழங்களுடன் கும்பாபிஷேகம் நிறைவு பெற்று பத்து நாட்கள் தொடர்ந்த மண்டலா பிஷேக கிரியைகள் இடம் பெற்று நேற்று புதன் கிழமை (24.07.2013) மண்டல பூர்த்தி அஸ்டோத்திர சங்காபிஷேசகம் இடம் பெற்று அன்னதானத்துடன் நிறைவு பெற்றது.

பூஜைகளை வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் தேவஸ்தான பிரதம குரு தேவ பூஜா அலங்கார வித்தகர் சிவஸ்ரீ எம்.புஸ்பராஜா குருக்கள் நடாத்தியதுடன் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பணிரெண்டு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.