இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் மட்டக்களப்பு மகஜன கல்லூரி மாணவி –மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்தார்

(லவீனேஷ்)

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கட் ணிக்கு மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் மாணவியொருவர் தெரிவுசெய்யப்பட்டு பெருமை சேர்த்துள்ளார்.

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியைச் சேர்ந்த ஜே. ஐடா என்ற மாணவியே இலங்கை அணி சார்பாக சர்வதேச போட்டிகளில் களமிறங்குகிறார்.

இவர் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டமைக்கு பல்வேறு துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிய நாமும் வாழ்த்துவோம்.