மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நிலை மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மாகாண கல்வித்திணைக்களத்தினால் இந்த விசேட கூட்டம் நடத்தப்பட்டது.
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாகாண கல்வித்திணைக்களத்தின் திட்டமிடல் உதவிப்பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயத்தினதும் கல்விப்பணிப்பாளர்கள்,உதவி கல்விப்பணிப்பாளர்கள்,மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்திக்குழுவின் பிரதிநிதிகள்,கோட்டக்கல்வி அதிகாரிகள்,ஆசிரிய மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்;டத்தின் கல்வி நிலை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
ஆத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011ஆம் 2012ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தொடர்பில் மீளாய்வுசெய்யப்பட்டன.
இதன்போது கல்வி நிலையில் பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் கா.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த பாடசாலைகளுக்கு இதன்போது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.