வவுணதீவு பிரதேச செயலாளர் தவராசா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட கமலசேவைகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் சிவலிங்கம் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தன்,இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் சத்தியவரதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வவுணதீவு பிரதேசத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக விவசாய நடவடிக்கைகளின்போது நீரைப்பெற்றுக்கொள்வது தொடர்பில் கடந்த காலத்தில் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இங்கு பிரதியமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.
விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் நீர்ப்பாய்ச்சல் குளங்கள் அனைத்தையும் திருத்தயமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
அதிகளவு நெல் வவுணதீவு பிரதேசத்தில் அறுவடை செய்யப்படுகின்றபோதிலும் அவற்றினை ஈரம் நீக்கி சேமிப்பதற்கு தேவையான வசதிகள் இல்லையென விவசாயிகள் தெரிவித்த குறைபாட்டை நீக்கும் வகையில்; நெல் உலரவைப்பதற்கான இடங்களை அமைப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் பிரதியமைச்சர் உறுதியளித்தார்.