(எம்.எஸ்.நூர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தங்களை குறைப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ திட்ட அறிக்கை நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடத்தில் கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணி;ப்பாளர் எஸ்.இன்பராஜன் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்சிடம் கையளித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணி;ப்பாளர் எஸ்.இன்பராஜன் மற்றும் இராணுவ பொலிஸ் படை அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட திட்டஅறிக்கையை மாவட்ட அரச அதிபர் படை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கையளித்தார்.
இந்த திட்ட அறிக்கையானது அனர்த்தங்கள் ஏற்படும் போது அதை எவ்வாறு குறைப்பது மற்றும் அனர்த்த முகாமைத்துவம், அனர்த்தங்களின் பின்னரான புனர் நிர்மானம், மீளக்கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.