பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான ஆலயத்தின் வரலாறுகூறும் இறுவட்டு வெளியீடு

மட்டக்களப்பு, பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான்  (நாககட்டு) ஆலயத்தின் வரலாறுகூறும் இறுவட்டு வெளியீடு நேற்றைய தினம் மாலை ஆலயத்தில் நடைபெற்றது.

 ஆலய வருடாந்த மகோற்வசம் எதிர்வரும் 12ஆம்திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 19.07.2013 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

நேற்றைய தினம், விஸ்வ பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்களினால் வடிக்கப்பட்ட ஆலய வரலாறுகூறும் இறுவட்டு வெளியிட்டுவைக்கப்பட்டது.

விஸ்வ பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இவ் இறுவட்டு வெளியீட்டில் ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சியின்  மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அருண் தம்பிமுத்து, பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாககட்டு உற்சவம், 19ஆம் திகதி நடைபெறும், மாபெரும் தேசத்துப் பொங்கல் பொதுத்திருவிழா மற்றும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.