மட்டக்களப்பு மாவட்டத்தில் சைவசித்தாந்தத்தினை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் வகையில் இந்த வகுப்புகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப வைபவம் இன்று காலை இந்துசமய அலுவல்கள் கலாசார திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் கேமலோஜினி குமரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் வாமதேவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டர்.
இந்துசமய அலுவல்கள் கலாசார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எழில்வாணி பத்மகுமாரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் தென்னிந்தியாவின் திருவாவடுதுறை ஆதினத்தினை சேர்ந்த பேராசிரியர் சித்தாந்த வித்யாநிதி சண்முகம் கலந்துகொண்டு சித்தாந்த விளக்கவுரைகளை நிகழ்த்தினார்.
இந்த வகுப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆன்மீகவாளர்கள், ஆசிரியர்கள்,உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்று ஆரம்பமான இந்த சித்தாந்த வகுப்புகள் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.