புன்னைச்சோலை பாலர் பாடசாலை சிறார்களின் தமிழ்த் தின விழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு புன்னைச்சோலை கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது .
இவ் விழாவுக்கு வருகை தந்த அதிதிகளை இப் பாடசாலை பழைய மாணவர்கள் நடனமாடி அழைத்து வந்தனர். அதன் பின் குத்துவிளக்கேற்றி விழா ஆரம்பமாகியது .
இவ் விழாவுக்கு பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மஹா வித்தியாலய அதிபர் திருமதி .என் .தர்மசீலன், மட்டக்களப்பு ஆதவன் அச்சக உரிமையாளர் சமாதான நீதிவான் கலாநிதி வை . வீரசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர் .
கௌரவ விருந்தினர்களாக பட்டிருப்பு தேசிய பாடசாலை பிரதி அதிபர் கே .தம்பிராஜா,புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம பூசகர் அ . மனோகரன், புன்னைச்சோலை பாலர் பாடசாலை அபிவிருத்திக் குழு முகாமையாளர் ஆர் .ரெட்னேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இத் தமிழ்த் தினா விழாவுக்கு மத்தியஸ்தர்களாக அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இவ் விழா நிகழ்வுகளில் மழலை குரல்களால் பாடல்களை பாடிய சிறார்களையும் , தமது நடன அசைவுகளால் நடனம் ஆடிய சிறார்களையும் ,இவர்களை பயிற்று வித்த ஆசிரியர்களையும் இந்நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் பாராட்டியதோடு , தமது உரைகளிலே இச் சிறார்களை நல்ல ஒழுக்கத்தோடு , நமது கலாச்சாரத்தோடு நல்ல மாணவர்களாக, நட் பிரஜைகளாக வளர வேண்டும் என கேட்டுக்கொண்டு சிறார்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.
இறுதியாக இப் பாடசாலை பழைய மாணவர்களின் நடன நிகழ்வோடு விழா இனிதாக நிறைவு பெற்றது .