அதாவது முருகப்பெருமானார் சூரபத்மனைசங்கரித்த வேலாயுதத்தில் இருந்து பிறந்த மூன்று ஒளிப்பிளம்புகளில் ஒன்று உகந்தை மலையிலும்; இன்னொன்று திருக்கோவில் வெள்ளை நாவல் மரமொன்றிலும் மற்றையது மண்டூரில் தில்லை மரத்திலும் வேல்களாக உதித்து காட்சி கொடுத்தன என்பது கர்ண பரம்பரையின் ஜதீகக் கதை மட்டுமல்லாது இவ்வாலயத்தின் ஆரம்பகாலம் முதல் இன்று வரை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உறுதியான உண்மையும்
இவ்வாலயத்தின் வருடார்ந்த உற்சவமும் கொடிக்கம்பம் வெட்டும் நிகழ்வும்இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது.
இக் கொடிக்கம்பம் என்பது இவ்வாலயம் தோற்றம் பெற்ற காலம் தொடக்கம் இன்று வரை இடம்பெற்றுவருகின்றது. கொடியேற்ற நாளான இன்று ஆலய மதியவேளைப் பூசையின் பிற்பாடு ஆலய வண்ணக்கர் தலைமையில் கப்புகனார் மற்றும் ஆலய பணியாளர்கள் சூழ ஆலய மண்டபத்திலிருந்து பூசைப்பொருட்களை ஏந்தியவாறு ஆலய வீதியினுடாக மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஜயனார் ஆலயத்தின் கொக்கட்டிமரத்தில் தான் இந்த கொடிக்கம்பம் வெட்டப்படுவது.
இயற்கையாகவும் அழகாகவும் விருட்சமாக வளர்ந்திருக்கின்ற அந்த கொக்கட்டி மரமானது இந்த ஜயனார் ஆலயத்தில்மட்டு;மே இருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
இவ்வாலயத்தில் காப்புகனாரால் கொக்கட்டி மரத்தின் கீழ் தயார் படுத்தப்பட்ட பூசைபொருட்களில் பூசைசெய்து பிராத்திக்கப்பட்டபின்னர்.நேர்த்தியான அந்தக் கொடிக்கம்பம் வெட்டப்படும் நிகழ்வு இடம்பெறும்.
பின்னர் வெட்டப்பட்ட கொடிக்கம்பத்தினை ஆலயவண்ணக்கரும் நடைபெறவிருக்கின்றஉற்சவகாலங்களில்பூசையினைச் செய்ய உரித்துடையவரான கப்புகனாரும் வெள்ளைப்பட்டினால் சுற்றப்பட்ட கொடிக்கம்பத்தினை சுமந்தவாறு நடைபாதையாக ஆலயத்தைச்சென்றடைவார்கள்.
பின்னர் கொடியேற்ற நாளிலிருந்து ஆலயத்தின் சந்தணமண்டபத்தில்
வைக்கப்பட்டு 21 நாட்களும் பூசைசெய்யப்படுவது வழக்கம்.
இம்முறை இக்கொடிகம்பம் வெட்டப்படும் காட்சியினை காண்பதற்காக நூற்றுக்கணக்காண பக்தர்கள் வந்திருந்தமை குறிப்படத்தக்கது.அத்தோடு இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்ட வண்ணக்கர்பொ.செல்வக்குமார ;இன் நிகழ்வுகளை தலைமைதாங்கி நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.