மட்டக்களப்பில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சைவ சித்தாந்த செயலமர்வை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று(புதன்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலசார மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சி.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் வி.வாசுதேவன், பாரம்பரிய வைத்தொழில் அமைச்சின் தேசிய இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வி கே.தங்கேஸ்வரி, மட்டக்களப்பு காயத்திரி பீடத்தின் சிவயோகச்செல்வன் சாம்ப சிவச்சாரியார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உதவியாளர் திருமதி எழில்வானி பத்மகுமார் உட்பட ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
14ம் திகதி ஆரம்பமான இச்செயலமர்வு இன்று(24)டன் பத்து நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றது.
இச் செயலமர்வில் நான்கு வலயங்களிலுள்ள பாடசாலைகளில் இந்து நாகரிகம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் சைப்புலவர்கள், அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியைகள், ஆலய தர்மகர்த்தாக்கள் என 50பேர் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர் சித்தாந்த வித்யாநிதி கே.சண்முகம் சைவ சித்தாந்த வகுப்புகளை நடாத்தி வைத்தார்.