பாடசாலையில் விபுலானந்தரின் சிலை விஷமிகளால் உடைப்பு

அக்கரைப்பற்றில் இராமகிருஷ்ணா மிஷன் மகாவித்தியாலயத்தில் உள்ள பழமைவாய்ந்த விபுலானந்தரின் சிலையை விஷமிகளால் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு உடைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தெரியவருவதாவது,

இப் பாடசாலையில் 1949 ஆண்டு காலப்பகுதியில் விபுலானந்தர் மணிமண்டபம் நிர்மானிக்கப்பட்டபோது மண்டபத்தின் முன்பகுதியில் வீதிக்கு அருகில் விபுலானந்தரின் சிலை நிறுவப்பட்டது பின்னர் இப் மணிமண்டபம் பழுதுடைந்த ததையடுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் புதிகாக மணிமண்டப நிர்மானப்பணிகளின்போது இவ் சிலையை அகற்றி பாடசாலையின் அதிபர் காரியாலத்திற்கு முன்பகுதியில் நிலத்தில் தற்காலிகமாக கடந்த இரண்டுவருடங்களுக்கு மேலாக இருந்துள்ளது.

இந்நிலையில் பாடசாலையில் இரவு நேரக் காவலாளி இல்லாத நிலையில் சனிக்கிழமை இரவு 8 மணியளவில்  பாடசாலையின் மின்சார விளக்குகளை போடுவதற்காக சென்ற ஆசிரியர் ஒருவர் இச் சிலை உடைக்கப் பட்டதையடுத்து பிரதி அதிபருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிரதிஅதிபர் சென்று பார்வையிட்டுள்ளதுடன் இது பாடசாலை மாணவர்கள் அன்றைய தினம் பிற்பகலில் விளையாடும்போது  பந்து பட்டு சிலை உடைந்து இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலை பெற்றோர்கள் மற்றும் இந்து அமைப்புக்கள் இது சில விஷமிகளால் உடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் இச் சிலை பந்துபட்டு இது வீழ்ந்து உடையக்கூடியது இல்லை எனவும். இச்சிலையை வைப்பதற்கான பொருத்தமான இடத்தை தெரிவுசெய்து வைக்காது கடந்த இரண்டுவருடங்களாக நிலத்திலே வைத்துள்ளனர் எனவும் இச் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக  கல்வி அதிகாரிகள்pடம் முறைபாடு தெரிவித்தும் அவர்கள் அசமந்தபோக்கில் உள்ளனர் என இந்து அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.