(வ.சுரேஸ் கண்ணா )
19.07.2013 கடந்த கொடியேற்றத்துடன் ஆரம்பமான வீச்சுக்கல்முனை தூய அன்னம்மாள் ஆலய 169ஆவது வருடாந்த திருவிழா மறைமாவட்ட ஆயர் பேரருட் தந்தை ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28.07.2013) காலை 7 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட பெருவிழா கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச் சொரூப ஆசீருடன் கொடியிறக்கி இனிதே நிறைவு பெற்றது .
பங்குதந்தை ஜே.ஏ.ஜி.ரெட்னகுமாருடன் ,பேராலய பங்குதந்தை ஜே.எஸ்.மொறாயஸ் ,அருட்தந்தையர்கள் அருட்பணி ஜெயகாந்தன் ,அருட்பணி திருச்செல்வம் அருட்பணி ஜீவன் ஆகியோர் ஆயருடன் இணைந்து பெருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தனர் .
இப்பெருவிழா திருப்பலியில் பெருமளவிலான அன்னையின் பக்தர்கள் மட்டு மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளிலும் இருந்து பக்தியுடன் கலந்துகொண்டனர்.