பனை அபிவிருத்திச் சபையின் உத்தியோகஸ்த்தர்களுக்கு நியமனக் கடிதம்,சான்றிதழ் உபகரணம் வழங்கும் நிகழ்வு

(சசி ஜதாட்சன்,எம்.என்.நூர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை அபிவிருத்திச் சபையில் தற்காலிகமாக கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு நிரந்தர நியமணக் கடிதம் மற்றும் பனை அபிவிருத்திச் சபையில் பயிற்சி பெற்றவாகளுக்கன சான்றிதழ் தாளங்குடா பனங்கைப்பணி பொருள் மாதிரிக் கிராம மக்களுக்கான உபகரணம் என்பவற்றை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரெட்ணம் தலைமையில் இடம்பெற்ற தாளங்குடா பனங்கைப்பணிப் பொருள் மாதிரிக் கிராம நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இதனை வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி,மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளர் செல்வி க.தங்கேஸ்வரி மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.