காளியம்மன் ஆலய உண்டியில் திருடன் இருவாரங்களின் பின்னர் மடக்கி பிடிப்பு

கோவில் உண்டியலை திருடியதாக கூறப்படும் நபரை பொதுமக்கள் மடக்கபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தாழங்குடா மதுராபுரம் கிராமத்திலுள்ள காளிகோவில் உண்டியலை திருடியதாக கூறப்படும் நபரே இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இவ் ஆலயத்தின் உண்டியல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை காரணமானவர் என நம்பப்படும் மேற்படி நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.