ஆரையம்பதி கண்ணகியம்மன் ஆலயத்தில் மதங்க மாதங்கி ஆசிரம சுவாமி கிருஸ்ணமங்கலம் அவர்களினால் இந்த யாகம் நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 26ஆம் அதிதி பிற்பகல் ஐந்து மணிக்கு ஆரம்பமாகும் இந்த யாகம் தொடர்ச்சியாக 28ஆம் திகதி பிற்பகல் வரை இடம்பெறும் என மதங்க மாதங்கி ஆசிரம சுவாமி கிருஸ்ணமங்கலம் தெரிவித்தார்.
பிற்பகல் பூரணாகுதியுடன் நிறைவுபெறும் யாகத்தினை தொடர்ந்து அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
பல்வேறு துன்ப துயரங்களையும் தீர்க்கவல்ல இந்த யாகத்தில் அனைவரையும் பங்குகொண்டு அருள்பெற்றுச்செல்லுமாறு மதங்க மாதங்கி ஆசிரம சுவாமி கிருஸ்ணமங்கலம் அழைப்பு விடுத்துள்ளார்.