மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இவ் மீளாய்வுக் கூட்டத்தில்மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, பொறியியலாளர் உள்ளிட்டோரும் மாவட்ட செயலக,14 பிரதேச செயலகங்களையும் சேர்ந்த பிரதி, உதவித் திட்டமிடல்பணிப்பாளர்கள், கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் , இந்திய வீடமைப்புத்திட்டம், திவிநெகும, பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடுகள், ஆரம்பப் பாடசாலை வேலைத்திட்டங்கள், நிறைவு பெறாத வேலைத்திட்டங்கள், மழைநீர் சேகரிப்புத்திட்டங்கள், விஞ்ஞான கணணி ஆய்வுகூட அபிவிருத்திகள், சமூர்த்தித்திட்டத்தின் திரிய பியச, தேசத்திற்கு மகுடம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
பிரதேச செயலக வாரியாக இத்திட்டங்கள் ஆராயப்பட்டதுடன், வேலைகளின் செயல்முறைகள், வேலை விலைவுபடுத்தல்கள் குறித்தும் ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.