மட்டக்களப்பு,கல்லடியில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கடந்த ஆறு மாதமாக தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி நெறியை இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய சுமார் 103 பொலிஸார் பயிற்சிகளை மேற்கொண்டுவந்தனர்.
இவர்கள் தமது தமிழ் மொழி பயிற்சியை பூர்த்திசெய்து வெளியேறும் வைபவம் கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி கி.ரவீச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் மேவன் சில்வா,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர் அக்மன,களுவாஞ்சிகுடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர் ரத்னாயக்க ,மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி ரத்நாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பொலிஸாரின் பல்வேறு மொழி விழிப்புணர்வு நாடகங்கள்,இசை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.