கடந்த ஐந்து தினங்களாக இடம்பெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று நிறைவுபெற்றது.
நேற்று செவ்வாய்கிழமை ( 16.07.2013) சக்கி யாகம், நோர்ப்புக்கட்டுதல் மற்றும் கடல்நீராடல் என்பன நடைபெற்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை ( 09.07.2013) ஆரம்பமான உற்சவத்தில் தினமும் சமயச்சொற்பொழிவுகள் இடம்பெற்றன.
இலங்கையின் எல்லாப் பாகங்களிலிருந்தும் சிறுவர்கள், பெரியோர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு கற்பூரச்சட்டியேந்தி தீமிதிப்பில் ஈடுபட்டனர்.