இப்பேரணியானது கிரான் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கிரான் தபால் அலுவலகம் வரை சென்று பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. பேரணி போக்குவரத்துக்கு எந்தவித இடையூம் இன்றி இடம்பெற்றது.
இப்பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், கி.துரைராஜசிங்கம்,வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி அபேவன்ச தேரோ மற்றும் விவசாயிகள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் “நீர்பாசனத் திணைக்களமே விவசாயிகளை மோதவிட்டுப் பார்க்காதே”,“நீர்பாசனத் திணைக்களமே விவசாயிகளை மோத விடாதே!”, “விவசாயிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்”, “வாகனேரிக் குளத்துக்கு வரும் நீரை சட்டவிரோத கட்டுக்களை போட்டு தடை செய்யாதே”, “சட்டவிரோத விவசாயத்தை தடை செய்”, “சட்டவிரோத கட்டுக்களை அகற்று” போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறு அர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் உரையாற்றினர்.
இவ்விடத்தில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், கி.துரைராஜசிங்கம்; ஆகியோரிடம் விவசாயகளினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதன்பின் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும், விவசாய அமைப்பு பிரதிநிதிகளும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரை சந்தித்ததுடன், விவசாய அமைப்பு பிரதிநிதிகள் அரசாங்க அதிபருக்கும், கிரான் பிரதேச செயலாளருக்கும் மகஜர் சமர்பித்தனர்.
அத்தோடு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளருக்கும் வழங்கப்பட்டது.













