இந்த அலுவலகத்தை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திர காந்தன் வைபவரீதியாக திறந்து வைத்தார்.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணி;ப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டக்களப்ப மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன், உட்பட பிரதேச செயலாளர்கள் அரசாங்க திணைக்கள தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குpழக்கு மாகாணத்தில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் மக்கள் இலகுவில் தமது சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்படுவதாக சந்திரகாந்தன் தெரிவித்தார்.