வாகனே பகுதியில் தமிழ் விவசாயிகள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட வகையிலான தாக்குதல் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பின்றி விசாரணைசெய்யவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
வாகனேரி பொத்தானைப்பகுதியான தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பகுதியாகும்.அப்பகுதியில் இரு சமூகத்தினரும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் விவசாயிகள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகளும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனமுரண்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் சுயலாபம் அடையும் வகையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கருதும் வகையில் உள்ளது.
கடந்த 30 வருடகால யுத்தத்தின்போது இப்பகுதி தமிழ் விவசாயிகள் பல துன்பங்களிலும் துயரங்களினாலும் அனைத்தையும் இழந்து இன்று ஓரளவு தங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும்போது அவர்கள் மீது திட்டமிட்ட மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தாக்குதலுக்குள்ளான விவசாயிகளுக்கு நீதியையும் நியாயத்தினையும் பெற்றுக்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் பக்கச்சார்பின்றி நடவடிக்கையெடுக்கவேண்டும்.அத்துடன் இது தொடர்பில் இன முரண்பாடுகளை ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் ஏற்படாத வகையில் செயற்படவேண்டியது எமது பொறுப்பாகும்.
அத்துடன் இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஸ்ட ஈடுகளை பெற்றுக்கொடுக்க உரியவர்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.