மட்டக்களப்பின் நீண்ட வரலாற்றினையும் அற்புதம் நிறைந்த ஆலயமாகவும் உள்ள நரசிங்க வைரவர் ஆலயம் தொடர்பில் முதன் முறையாக இந்த இறுவெட்டு தயாhரிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கலைஞர்களான கோ.சிவாகரனின் இசையில் வெளிவந்துள்ள இந்த பாடல்களை இசை விற்பன்னர் சாந்தினி தர்மநாதன்,பத்மஸ்ரீ ஆகியோர் பாடியுள்ளனர்.
சித்த வைத்தியரும் சமூக சேவையாளருமான கண்ணன் வைத்தியரின் முழு முயற்சியினால் இந்த இறுவெட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் வெளியீட்டு விழா அண்மையில் ஆலய வளாகத்தில் ஆலய தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், மா.கிருஸ்ணபிள்ளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி,முன்னாள் வடகிழக்கு மாகாண கலாசார திணைக்கள பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இறுவட்டு வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் பாடல்களை பாடியவர்கள், இசையமைத்தவர்கள் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது இசையமைப்பாளர் கோ.சிவாகரனுக்கு தேனக இசையருவி விருதும் பாடகர்களான திருமதி சாந்தினி தர்மநாதனுக்கு தேனக இசைச்சுடர் விருதும் பாடகர் பத்மஸ்ரீக்கு தேனக இசைமாமணி விருதும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மக்கள் வங்கியின் நகரக்கிளை முகாமையாளர் சரவணபவனின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது.