மட்டக்களப்பில் முதலீடுசெய்ய இந்தோனேசியா தயார்

கிழக்கு மாகாணத்தில் இந்தோனேஸிய முதலீட்டாளர்கள் முதலீடுசெய்ய விரும்பம் கொண்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரகத்தின் முதலாவது செயலாளர் அல்பட் அப்டி தெரிவித்தார்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதிகளவான இந்தோனேசிய வர்த்தகர்கள் இலங்கையில் முதலீகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளன பிரதிநிதிகளை மட்டக்களப்பில் உள்ள அதன் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது புடவை மற்றும் காகிதாதிகளை இந்தேனேசியாவிலிருந்து இறக்குமதி செய்தல் இந்தோனேசியாவின் முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்து முதலீடுகளை மேற்கொள்ளுதல் போன்றவைகள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டன.

ஆத்துடன் இலங்கையில் உள்ள வர்த்தகர்கள் இந்தோனேசியா வருகைதந்து அங்கிருந்து சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளுமாறும் வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி நிருவாக உத்தியோகத்தர் எஸ்.குகதாஸ், மற்றம் சம்மேளன பிரதிநிதிகள், மட்டக்களப்பிலுள்ள வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.