மட்டக்களப்பு மாவட்டத்தில் சோளம் அறுவடை

(எம்.எஸ்.நூர்)

மட்டக்களப்பு மாவட்;டத்தில் சோளம் அறுவடை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டதனால் சோளம் அறுவடை பாரிய வெற்றி அளித்ததாக விவசாய திணைக்களம் தெரிவித்தது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு மத்திய அமைச்சின் உதவியோடு சோளம் பயிர் செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் முலம் 200 ஏக்கர் நிலத்தில் சோளம் பயிர் செய்வதற்காக விதைகளை வழங்கியதோடு போதிய ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு வழங்கிவந்தது.
இதன் மூலம் விவசாயிகள் சோளம் பயிர்ச்செய்கையில் பாரிய வெற்றியை இப்போகத்தில் பெற்றுக் கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் மட்;டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் தைக்கா வீதியில் செய்கை பண்ணப்பட்ட சோளம் அறுவடை விழா அண்மையில் இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் சோளம் அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் உழுந்து, கௌஃபி, நிலக்கடலை, சின்ன வெங்காயம் பச்சை மிளகு, இதர மரக்கறி வகைகளும் உற்பத்தி செய்வதற்காக சுமார் 750 ஏக்கருக்கு விவசாய உதவிகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சோளக அருவடை வைபவத்தில் அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹ_சைன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரா.ஹரிகரன், ஏறாவூர் விவசாய போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்தீன், பண்ணையாளர் முஹமட் ரஸாக் ஆகியோர் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.