அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட 23பேர் களுவாஞ்சிகுடியில் கைது (படம் இணைப்பு)

மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 23பேர் இன்று அதிகாலை வியாழக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையிலிருந்து சட்டவிரேதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முற்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருக்கள்மடம் இராணுவ முகாமுக்கு கிடைக்கப்பெற்ற தகவலிகன் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இவர்களை கைதுசெய்யதுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒன்பதுபேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் எனவும் 14பேர் தமிழர்கள் எனவும் கைதுசெய்யப்பட்டவர்களின் ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜத் பிரியந்த தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என தெரிவித்த பொலிஸார் அதிகமானொர் வவுனியா,குருணாகல்,வென்னப்புவ மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து பெருமளவான அரிசி,சீனீ,சோயாமீட் மூடைகள் உட்பட பெருமளவான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.