மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் மாபெரும் கல்விக்கண்காட்சி இன்று கோலாகலமாக ஆரம்பமானது.
பாடசாலை அதிபர் அருட்செல்வி எலிசபெத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் சிவநாதன்,மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சத்தியநாதன் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பகுதியில் பிரமாண்டமான முறையில் முதன்முறையாக இவ்வாறான கல்விக்கண்காட்சியொன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடப்பரப்புகளையும் கொண்டதாக 53 கல்விக்கண்காட்சி கூடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
மூன்று தினங்கள் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியானது காலை 8.30மணி தொடக்கம் மாலை 6.30மணி வரை இடம்பெறும் என அதிபர் அருட்செல்வி எலிசபெத் தெரிவித்தார்.
மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் சிறந்த படைப்புக்களை கொண்டதாக கண்காட்சிகள் அமைந்துள்ளன.அத்துடன் மாணவர்கள் அறிந்துகொள்ளக்கூடிய பல விடயங்கள் இந்த கண்காட்சியில் அடங்கியுள்ளன.