மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஐந்து ஆண்டு திட்டங்கள் தொடர்பில் ஆராய்வுக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஐந்து ஆண்டு அபிவிருத்தித்திட்டம் குறித்த திணைக்களங்களின் முன்மொழிவுகள் தொடர்பான ஆராய்வுக் கூட்டங்கள் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில்  நடைபெற்று வருகின்றன.

இதன் முதலாவதாக விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளுக்கான ஆராய்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றன.

இதில் விவசாயத்திணைக்கள, கமநல சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், விதைகள் அத்தாட்சிப்படுத்தல் பிரிவு ஆகியவற்றினதும், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி அபிவிருத்தி, வீதி, வீடமைப்பு, நீர்வழங்கலும் வடிகாலமைப்பும், சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், கைத்தொழில் துறை, சூழலும் அனர்த்த முகாமைத்துவமும், உள்ளுராட்சித்துறை, கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்திகள், தொழில்துறை மேம்படுத்தல்கள் எனப் பல பிரிவுகளில் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலாக ஆராய்வுக் கூட்டங்கள் எதிர்வரும் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட அபிவிருத்தித் திட்டமானது 2013 முதல் 2017வரையில் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.