மதுபான பாவனையினையும் சட்டவிரோத மதுபான விற்பனையினையும் தடுக்கும் நடவடிக்கை

(சசி ஜதாட்சன்)


சட்டவிரோத மதுபான விற்பனையினால் அதிகரித்துவரும் மதுபானப் பாவனையினையினையும் அதனால் ஏற்படும் குடும்ப வன்முறை சமூதாய சீர்கேடுகளை தடுக்கவும் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தவும்  மண்மனை மேற்குப் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மண்முனை மேற்கப் பிரதேச செயலகப் பிரிவில் சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துள்ளதுடன் மதுபானப் பாவனையும் அதிகரித்து வருகின்றது இதனால் பல்வேறு பிரச்சினைகளை பெண்களும் சிறுவர்களும் மாணவர்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இன் நிலையில் இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கையினை மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா சர்வோதய நிறுவனத்தின் ஊடாக முன்னெடுத்து வருகின்றார்.

சட்டவிரோத மதுபான விற்பனையினை தடுத்து அவ்வாறு விற்பனையில் ஈடுபடுபவர்களின் பிரச்சினையினை இனங்கண்டு அவர்களுக்கு மாற்றுத் தொழிலை ஏற்பாடு செய்து குடும்ப பொருளாதாரத்தைக் கட்டியேழுப்புவதற்கு உதவுவதோடு மதுபான பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கவும் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கை வியாளக் கிழமை மண்முனை மேற்கப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரசேத செயலாளர் வெ.தவராஜாவின் ஏற்பாட்டில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு வேலைத் திட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மதுபான பாவனைக்கு அடிமையானோர் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுடாக வரவளைகட்கப்பட்டு விழிப்புணர்வு கருத்தரங்க இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநல வைத்திய நிபுணர் கடம்பனாதன் வளவாளராகக் கலந்துகொண்டு விழிப்புணர்வு திட்டத்தினை முன்னெடுத்தார்.

இந் நிகழ்வில் சர்வோதய நிறுவனத்தின் இணைப்பாளர் மதன்குமார் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.