மெதடிஸ்த திருச்சபையின் 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் நிகழ்வுகள்

இலங்கையில் மெதடிஸ்த்த திருச்சபை ஆரம்பிக்கப்பட்டு 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

மெதடிஸ்த திருச்சபையின் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மெதடிஸ்த திருச்சபை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தேவ மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் அருட்திரு தயாசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மெதடிஸ்த திருச்சபையின் இலங்கைக்கான தலைவர் அருட்திரு கலாநிதி ஏ.டபிள்யு ஜெபநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்குப்பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மெதடிஸ்த திருச்சபையின் 200வது ஆண்டை குறிக்கும் வகையில் மட்டக்களப்பு வின்ஸ்டன் பெண் தேசிய பாடசாலைக்கு முன்பாகவிருந்து அதிதிகள் பேரணியாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து ஜெப விழிபாடுகளை தொடர்ந்து மெதடிஸ்த திருச்சபை 200வது வருடத்தினை பூர்த்திசெய்யும் வகையில் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுக்கல் அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அதிதிகளின் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.